
ரூர்கேலா: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 9-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 9-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கோவர்ஸ் பிளேக் 4 கோல்கள் (3, 14, 18 மற்றும் 19-வது நிமிடம்) அடித்தார்.