
அதென்ன ஷார்ட்கட்? : வாட்ஸ்அப்பில் ரிப்ளை மற்றும் மார்க்டு ஆஸ் ரீட் என்கிற 2 ஷார்ட்கட்களுடன் மேலும் ஒரு புதிய ஷார்ட்கட் வசதியான பிளாக் (பிளாக்) என்கிற மூன்றாவது ஷார்ட்கட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாக்கிங் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பிளாக் வசதி என்பது உங்களுக்கு தெரியாத அல்லது தேவை இல்லாத எண்ணில் இருந்து வந்த மெசேஜை திறந்து, குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்டல் (அரட்டை) நுழைந்து, பின்னர் செட்டிங்ஸ்க்கு (அமைப்புகள்) சென்று, பிளாக் அம்சத்தை கிளிக் செய்வதற்கு பதிலாக, நேரடியாக நோட்டிஃபிக்கேஷன் வழியாக அந்த நம்பரை பிளாக் செய்யலாம். அறியாதோர்களுக்கு பிளாக் என்பது குறிப்பிட்ட வாட்ஸ்அப் தொடர்பை தடுக்கும் ஒரு அம்சம் ஆகும்.