
கட்டண வருமானம்
ஆக்ஸிஸ் வங்கியின் கட்டண வருமானம் விகிதமானது இந்த காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 23 சதவீதம் அதிகரித்து, 4101 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சில்லறை கட்டண விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வங்கியின் மொத்த கட்டண வருவாய் வீதமானது, 69 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிரெடிங் கட்டணம்
சில்லறை அசெட்கள் (கார்டுகள் மற்றும் பேமெண்டுகள் தவிர ) மீதான கட்டணம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே டிரெடிங் கட்டணம் 17% அதிகரித்து, 428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே வட்டி அல்லாத வருமானம் 21 சதவீதம் அதிகரித்து, 4,665 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

புரவீசன்ஸ்
புரவீசன்ஸ் விகிதமானது 1438 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கியின் மொத்த வாரக்கடன் விகிதமானது 2.38% ஆக உள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 2.5% ஆக இருந்தது. இதே நிகர வாராக்கடன் விகிதமானது 0.47 சதவீதமாகவும், இது முன்னதாக 0.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

ஆப் மூலம் வளர்ச்சி
இவ்வங்கியின் மொபைல் ஆப் மூலமாக வலுவான வளர்ச்சியினைக் கண்டு வருகின்றது. இதன் மாத ஆக்டிவ் பயனர்கள் 1.1 கோடியாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் 68 லட்சம் பேரும், இதே ஆக்ஸிஸ் மொபைல் மற்றும் ஆக்ஸிஸ் பே ஆப்பரையும் பயன்படுத்துகின்றனர்.

கடன் வளர்ச்சி
கிரெடிட் கார்ட் அட்வான்ஸ் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே தனி நபர் கடன் விகிதமானது 21 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதே நடுத்தர கார்ப்பரேட் கடன் வளர்ச்சியானது, 42 சதவீதம் அதிகரித்து, இதே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு-கானா கடன் வளர்ச்சி+ SBB + MC கடன் வளர்ச்சியானது 1,53,652 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பங்கு விலை நிலவரம்
தொடர்ந்து வாராக்கடன் விகிதம் சரிந்து வரும் நிலையில், மறுபுறம் கடன் வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது. இதன் டிஜிட்டல் வளர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. இது மேற்கொண்டு இவ்வங்கியின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலையானது 2.15 ரூபாய் அதிகரித்து, 932.70 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதே பி.எஸ்.ஐ-யில் 933.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

சாதகமான காரணிகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், வலுவான லாபத்தினை கண்டுள்ளது. இது இனி வரவிருக்கும் காலண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட்டி வருவாய் அதிகரித்து, வாரக்கடன் குறைந்துள்ளது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.