
வங்கித்துறையில் வேலை வாங்க வேண்டும் என ஆர்வமாக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அருமையான வாய்ப்பு. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officer) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யுபிஐயின் அதிகாரப்பூர்வ தளமான Unionbankofindia.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஜனவரி 23 அன்று தொடங்கப்பட்டது. பிப்ரவரி 12, 2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை சரிபார்க்கவும்.
காலியிட விவரம்:
தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்): 3.
சீனியர் மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்): 34.
மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்): 5.
கல்வி தகுதி:
தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சீனியர் மேனேஜர் பதவிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) – 25 முதல் 40 ஆண்டுகள்.
சீனியர் மேனேஜர் (கிரெடிட் அதிகாரி) – 25 முதல் 35 வயது.
மேனேஜர் (கடன் அதிகாரி) – 22 முதல் 35 வயது.
வயது தளர்வு:
OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வைபோயிடலாம்.
சம்பள விவரம்:
தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு, ரூ. 76,010 முதல் ரூ. 89,890 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
சீனியர் மேனேஜர் (கடன் அதிகாரி) பதவிக்கு, ரூ. 63,840 முதல் ரூ. 78,230 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்) பதவிக்கு, ரூ. 48,170 முதல் ரூ. 69,810 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 850 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் 150 ரூபாய் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு செயல்முறை:
ஆன்லைன் தேர்வு.
குழுமுறையில் கலந்துரையாடல்.
தனிப்பட்ட நேர்காணல்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in ஐப் பார்வையிடவும்.
பின்னர், “Recruitment” பகுதிக்கு செல்லவும்.
இப்போது, “Click Here to Apply Online for Manager, Chief Manager and Senior Manager Posts” என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்களை பதிவு செய்து உள்நுழையவும்.
தேவையான விவரங்களை நிரப்பி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.