
பார்க்லே வங்கி
உலகின் 10வது பெரிய வங்கியாக இருக்கும் பார்க்லேஸ் கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் வங்கி சேவையில் கூடுதல் முதலீட்டைச் செய்து அனைத்து விதமான சேவைகளை இண்ட்நெட் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் மூலம் அளித்து வருகிறது. இதனால் வங்கி கிளைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.

பீட்டர் விஸ்பை
இந்த நிலையில் தான் தென் லண்டனை சேர்ந்த ஒரு பார்க்லேஸ் வங்கி கிளையில் வெறும் ஒரு வாடிக்கையாளருக்காக ஒட்டுமொத்த வங்கி கிளையும் இயங்கி வருகிறது. தென் லண்டனில் பெர்மண்ட்சே பகுதியில் டவர் பிரிட்ஜ் சாலையில் இருக்கும் பார்க்லேஸ் வங்கி கிளையில் 84 வயதான பீட்டர் விஸ்பை என்பவர் மட்டுமே வங்கி கிளைக்கு வரும் வாடிக்கையாளராக உள்ளார்.

இண்டர்நெட் வங்கி
பீட்டர் விஸ்பைக்கு இண்டர்நெட் வங்கி பயன்படுத்தத் தெரியாது என்பதால் இவர் மட்டுமே டவர் பிரிட்ஜ் சாலையில் இருக்கும் பார்க்லேஸ் வங்கி கிளைக்கு வந்து பணத்தை டெபாசிட் செய்வதோ அல்லது வித்திரா செய்து வரும் நபராக உள்ளார். இந்த நிலையில் பார்க்லேஸ் வங்கி நிர்வாகம் இக்கிளையை மூட முடிவு செய்துள்ளது.

பியூச்சர் பொன்
இந்த பகுதியில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இண்டர்நெட் வங்கி சேவையைப் பயன்படுத்துவதற்கு காரணத்தால் வங்கி கிளைக்கு யாருமே வருவது இல்லை. பீட்டர் விஸ்பை மற்றும் அவரது மனைவியும் சாதாரணப் பியூச்சர் போன் மட்டுமே பயன்படுத்தும் காரணத்தால் இண்டர்நெட் வங்கி சேவையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளார்.

பார்க்லேஸ் வங்கி நிர்வாகம்
இந்த நிலையில் பீட்டர் விஸ்பை-க்கு அவரது பேரப்பிள்ளைகள் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்து இணைய வங்கி சேவையைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுப்பதாக உறுதி அளிக்கக் காரணத்தால் இந்த Barclays வங்கி கிளையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏடிஎம் மெஷின்
இதேபோல் பீட்டர் மற்றும் அவரது மனைவியும் ஏடிஎம் மெஷின் கூடப் பயன்படுத்துவது இல்லை, ஏடிஎம் இயந்திரங்களை அவர்கள் மோசடி செய்யும் இயந்திரம் என நினைக்கும் காரணத்தால் ஏடிஎம்-ஐ பயன்படுத்த மறுக்கின்றனர்.

பீட்டர் விஸ்பை பிரச்சனை
பீட்டர் விஸ்பை தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் பகுதி சவுத்வார்க் பார்க் சாலை, ஆனால் அதையும் சில வருடங்களுக்கு முன்பே மூடப்பட்டு, தற்போது தொலைவில் இருக்கும் டவர் பிரிட்ஜ் சாலை கிளைக்குப் பீட்டர் வருகிறது. தற்போது இதுவும் மூடப்பட்டு உள்ளது.