
மும்பை & என் சி ஆர் நிலவரம்
இதே மும்பையில் கடந்த ஆண்டினை காட்டிலும் வாடகை விகிதமானது 7% வளர்ச்சியினை கண்டுள்ளது. என்சிஆரில் வாடகை நிலையானதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் ஏற்கனவே என் சி ஆரில் வாடகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை அதிகரிக்கும்
இந்த காலாண்டில் இந்த மூன்று நகரங்களிலுமே பிரதான வாடகை என்பது நிலையானதாக இருந்தது. தற்போது தேவையானது அதிகரித்து வரும் சூழலில், அடுத்த 12 மாதங்களில் பெங்களூரு, மும்பை, என் சிரில் வாடகை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

20 நாடுகள் பட்டியலில்
இந்த APAC சந்தையில் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில், சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கும்.
இந்திய பொருளாதாரம் என்பது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில் பணவீக்கத்தின் அச்சம் இருந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தில் தக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேலும் வணிக வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பொருளாதாரத்தில் அச்சம்
மேலும் தொடர்ந்து பெருந்தொற்றின் அச்சமும் நிலவி வருகின்றது. இது மேலும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் சர்வதேச பொருளாதாரம் என்பது எதிர்பார்ப்பை விட சரிவில் காணப்படுகின்றது. அதேசமயம் இந்தியாவின் வளர்ச்சி என்பது மெதுவாகக் காணப்பட்டாலும் சற்றே வளர்ச்சி பாதையில் உள்ளது ஆரோக்கியமானதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

வேறு எங்கெல்லாம் அதிகம்
இந்தியா தவிர, ஆக்லாந்து, சிங்கப்பூர் மற்றும் பாங்காங் உள்ளிட்ட நாடுகள் வாடகை வளர்ச்சிக்கான பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன. எனினும் அடுத்த 12 மாதங்களில் பாங்காங்கில் வாடகை விகிதம் குறையலாம் என இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு செலவு
இந்திய நகரங்களில் என்சிஆரில் ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 78.7 டாலர் ஆகவும், அதனை தொடர்ந்து மும்பையில் ஒரு சதுர அடிக்கு 70.8 டாலர் ஆகவும், பெங்களூருவில் ஒரு வருடத்திற்கு 36.3 டாலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2022ம் ஆண்டின் 4வது காலாண்டில் ஹாங்காங்கின் SAR ஆண்டுக்கு 174.3 டாலர்களை அதிகபட்சமாக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து சிங்கப்பூர் சதுர அடிக்கு 109 டாலராகவும், டோக்கியோவில் சதுர அடிக்கு 92.8 டாலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023 சாதகமாக இருக்கலாம்
2023ஆம் ஆண்டு சந்தை நிலைமைகள் குத்தகைதாரர்களுக்கு ஆதரவாக இருக்கும். ஏனெனில் நிலையான தேவையான வசதிகளை கொண்ட கட்டிடங்கள் பலவும், பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாகவும் அறிக்கை கணித்துள்ளது.
இது நிறுவனங்களின் செலவை கட்டுக்குள் வைக்க பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக நிறுவனங்கள் பெரிதும் எதிர்கொள்ளும் செலவில் அலுவலக வாடகை முக்கியமானதாக இருக்கும்.

வீடு விலை அதிகரிக்கலாம்
இது ஒரு புறம் எனில் மறுபுறம் இதுவே வீட்டு வாடகை, வீட்டின் விலைகளையும் வழிவகுக்கலாம். மக்கள் அதிகளவில் தங்களது வேலைகள் காரணமாக நகரங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இது வீட்டை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ வழிவகுக்கலாம். இது மேலும் வீட்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.