
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடையும் நிலையில் இந்த சீசனில் சில புதுமையான அம்சங்களை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கடைசி வாரத்தில் பணப்பெட்டி மட்டுமே அறிமுகம் செய்யப்படும் நிலையில் இந்த சீசனில் பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டும் அறிமுகமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு நான்கு போட்டியாளர்கள் தகுதி பெற்ற நிலையில் திடீரென மிட்வீக் எவிக்சனில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
விக்ரமன், ஷிவின், மைனா மற்றும் அசீம் ஆகிய நால்வரில் ஒருவர் மிட்வீக் எவிக்சன் அறிவித்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மைனா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூவரில் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
#நாள்103 #Promo4 இன் #பிக்பாஸ் தமிழ் #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #பிக்பாஸ் #பிக்பாஸ் #விஜய் தொலைக்காட்சி @ப்ரீத்தி இந்தியா @நிப்பான் இந்தியா pic.twitter.com/t5hZvOzs7V
— விஜய் தொலைக்காட்சி (@vijaytelevision) ஜனவரி 20, 2023