
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகி வரும் நிலையில் சற்றுமுன் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் கசிந்து உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கான மூவர் தேர்வு சற்றுமுன் வெளியான புரமோவில் அறிவிக்கப்பட்டது.
எனவே இந்த சீசனின் வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில் ஏற்கனவே கசிந்த தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராக அசீம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு டைட்டில் வின்னர் கோப்பையும், ரூ.50 லட்சம் பரிசுப்பணமும் வழங்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சீசனின் ரன்னராக விக்ரமன் மற்றும் மூன்றாவது இடத்தை ஷிவின் ஆகியோர் பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சீசனின் டைட்டிலை விக்ரமன் வெல்வார் என கடந்த சில நாட்களாக பார்வையாளர்கள் கணித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென அசீமுக்கு வாக்குகள் குவிந்து அவர் டைட்டில் வட்டத்தை தட்டிச் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.