
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஒருவரை உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கும் என பிக் பாஸ் கலாய்த்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வந்த நிலையில் சில நாட்களாக சிறப்பு விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான கவின் வந்துள்ளார். தனது ‘டாடா’ படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ள அவரை பிக் பாஸ், ‘உங்களுக்கும் பெட்டிக்கும் எந்த ராசியோ தெரியவில்லை, நேற்று பெட்டி போச்சு, இன்னிக்கு நீங்க வந்திருக்கீங்க’ என்று கலாய்த்தார்.
கவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸின் நகைச்சுவை ரசித்து கைதட்டினார்கள். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான கவின், பணப்பெட்டியை எடுத்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதி போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய மூன்று பேருக்கும் கவின் வாழ்த்து தெரிவித்து ‘நன்றாக இருங்கள், வெளியே வரும் போது ஜாலியாக வாருங்கள்’ என்று அறிவுரை கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.
#நாள்104 #Promo2 இன் #பிக்பாஸ் தமிழ் #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #பிக்பாஸ் #பிக்பாஸ் #விஜய் தொலைக்காட்சி @ப்ரீத்தி இந்தியா @நிப்பான் இந்தியா pic.twitter.com/3YjUhaXu6m
— விஜய் தொலைக்காட்சி (@vijaytelevision) ஜனவரி 21, 2023