
பிஎம்டபிள்யூ நிறுவனம், எக்ஸ் 7 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 3.0 லிட்டர், 6 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,200 முதல் 6,250 ஆர்பிஎம்-ல் 375 பிஎச்பி பவரையும், 1,850 முதல் 5,000 ஆர்பிஎம்-ல் 520 என் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின், 4,400 ஆர்பிஎம்—335 பிஎச்பி பவரையும், 1,750 முதல் 2,250 ஆர்பிஎம்-ல் 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இரண்டுமே 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்டிரைவ் ஆல் வீல் டிரைவுடன் வருகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில், ஸ்பிளிட் எல்இடி ஹால்ப்கள், முன்புற பம்பர், கிரில் ஆகியவை புதிய தோற்றப்பொலிவை அளிப்பதாக உள்ளது. கேபின் பகுதியில் வளைவான டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே வலது புறம் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இடது புறம் 14.9 அங்குல இன்போடெயின் மென்ட் சிஸ்டம் என இரண்டு பிரிவுகளாக அமைக்கப்பட்டது. ஷோரூம் விலையாக பெட்ரோல் கார் ரூ.1.22 கோடி எனவும், டீசல் கார் ரூ.1.25 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.