
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.4-ம் தேதி வரை 12 நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடிமரம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர்.