
பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெறுகின்றன. இருப்பினும் இதுவரை இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தப் படத்துக்கு அதிக வசூல் கிடைத்துள்ளது என்ற போட்டி ரசிகர்களிடையே நிலவுகிறது. முதல் நாளில் தமிழ் நாட்டில் துணிவு படம் வசூலில் முதலிடத்திலும் அதற்கு அடுத்த நாட்களில் வாரிசு முதலிடத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இரண்டு தரப்பு தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வசூல் விவரங்களை வெளியிடவில்லை.
அதன் ஒரு பகுதியாக வாரிசு படக்குழு பொங்கல் வின்னர் என போஸ்டர் வெளியாகி அதற்கு பதிலடி தரும் வகையில் துணிவு படக்குழுவினர் ரியல் வின்னர் என போஸ்டர் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்த சில நாட்களுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமையும் என்பது விநியோகஸ்தர்கள் கருத்தாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வாரிசு படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து ரியல் பொங்கல் வின்னர் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்துகொண்டுள்ளனர்
முன்னதாக துணிவு படத்தின் பிரமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டுள்ளார். ‘நீங்க ஸ்டன் ஆகிற மாதிரி ஒரு ஃபிளாஸ்பேக் சொல்றேன்’ என்று அஜித் பேசும் காட்சியின் பிரமோவை வீடியோ பகிர்ந்து, உலக அளவில் மிகப்பெரிய வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டன் அகரமாரி ஒரு பிளாஷ்பேக் சொல்றேன் சார்💥💥#ThunivuHugeBlockbuster Worldwide 💥💥💥#துனிவு #துவினுபொங்கல் #NoGutNoGlory#அஜித்குமார் #எச்.வினோத் @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @சுரேஷ்சந்திரா #ரோமியோ படங்கள் @mynameisraahul pic.twitter.com/r9w2TkrErh
– போனி கபூர் (@BoneyKapoor) ஜனவரி 16, 2023
இதில் ஹைலைட் என்னவென்றால் போனி கபூர் ட்விட்டர் பதிவில் நெட்லிக்ஸையும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாவதை அவர் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: