
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதீர் வர்மாவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தனுஷ்: ‘தனுஷ் 50’ படத்தில் இந்த நடிகையா.?: இதென்ன புது ட்விஸ்ட்.!
இவரது மறைவு தொடர்பாக நடிகர் சுதாகர் கோமகுல, “சுதீர் மிகவும் அழகான மற்றும் அன்பான மனிதர். உங்களை அறிந்ததும் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சகோதரா. நீங்கள் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இது போன்று பலரும் சுதீரின் திடீர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.