
வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இந்த பட்ஜெட் வங்கிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கும் வங்கிகளுக்கு போதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடன் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூலதனம் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை.

மூலதன உட்செலுத்துதல் இருக்காது
பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மேம்பட்டு 1 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வங்கிகளுக்கு மூலதனம் ஒதுக்கீடு என்பது இருக்க வாய்ப்பில்லை. தற்போது மூலதன இருப்பானது இலக்கினை விட 14 – 20% அளவுக்கு அதிகமாகவே உள்ளது என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

வங்கிகள் நிதி திரட்டல்
ஆக வங்கிகள் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் நிதியினை திரட்டி வருகின்றன. ஆக அவற்றின் முக்கியமான சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமும், தேவையில்லாத லாபம் கொடுக்காத சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமும் போதிய நிதியினை திரட்ட முடியும். இதற்காக மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 – 22ல் வங்கிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

லாபம் எவ்வளவு?
அரசு ஐந்து நிதியாண்டுகளில் 2016 – 17 முதல் 2020 – 21 வரையிலான ஆண்டுகளில், வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்ய 3,10,997 கோடி ரூபாயாக அரசு செலுத்தியுள்ளது. இதில் 34,997 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவும், இதே 2,76,000 கோடி ரூபாய் மறுமூலதனம் வழங்கியதன் மூலமாகவும் அளிக்கப்பட்டது. அனைத்து பொதுத்துறை வங்கிகளின் லாபம் முதல் காலாண்டில் 15,306 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியிருந்தது. இதே இரண்டாவது காலாண்டில் 25,685 கோடி ரூபாய் லாபத்தினையும் ஈட்டி இருந்தது.

நிகரலாபம்
இரண்டாவது காலாண்டில் அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கியின் லாபம் 13,265 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 74% அதிகமாகும். 2023ம் நிதியாண்டின் முதல் பாதியில் நிகரலாபம் 32% அதிகரித்து, 40,991 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2021 – 22ம் ஆண்டு அழுத்தத்தின் காரணமாக 66,539 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டு நிலவரம்
12 பொதுத் துறை வங்கிகளின் நிகரலாப விகிதமானது செப்டம்பர் காலாண்டில், 50% அதிகரித்து, 25,685 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் எஸ்பிஐ கடந்த நிதியாண்டில் 9 மாதங்களில் எஸ்பிஐ வங்கியின் டிவிடெண்ட் 7,867 கோடி ரூபாயாக இருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பானது தொடர்ந்து வங்கிகளுக்கு ஊக்கத்தினை அளிக்கலாம். வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.