
முக்கிய தலைவர்கள்
இன்று நடந்த அல்வா நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த பங்கஜ் சவுதிரி, பகவத் கிஷன்ராவ், நேரடி வரி துறை மற்றும் CBIC பிரிவின் தலைவர்கள் மற்றும் இதர நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

லாக்-இன் செயல்முறை
பட்ஜெட் அச்சடிக்கும் பணியில் குடியரசு ஈடுபட்டுள்ள அதிகாரிகள் “லாக்-இன்” செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வருடமும் நித்தியமைச்சகத்தால் நடத்தப்படும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நாளான இன்று நடத்தப்பட்டது.

மத்திய நிதியமைச்சர்
வழக்கமாக யார் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்களோ அவர் தான் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் தொடங்குவார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் இன்று அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்கி டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தில் உள்ள சக ஊழியர்களுக்கும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த அல்வா பகிரப்பட்டது.

பிரின்ட்டிங் பிரஸ்
இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிக்குப் பின்பு தான் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரின்ட்டிங் பிரஸ்-ல் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்படும். இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சகத்தின் நார்த் பிளாக் பகுதியில் தான் எப்போதும் நடக்கும்.

பாதுகாப்பு, ரகசியம்
பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படும் பணியை கூடுதல் பாதுகாப்பு உடனுக்குடன், ரகசியமாகவும் காரணத்தால் நாடாளுமன்ற அச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அச்சிடுவது வழக்கம்.

பிப்ரவரி 1 வரை லாக் இன்
இந்த பட்ஜெட் அறிக்கையை அச்சிடப்படும் ஊழியர்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு தான் வெளியே வருவார்கள். அதுவரையில் நித்தியமைச்சகத்தின் பேஸ்மென்ட்டில் அச்சத்தில் இருப்பார்கள்.

அல்வா நிகழ்ச்சி
2021ல் அல்வா நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி நடந்தது. இது கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவிக்கப்பட்ட 9 நாட்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஒமிக்ரான் நிகழ்ச்சி தொற்று காரணமாக அல்வா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காகிதம் இல்லாத பட்ஜெட்
மேலும் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் தேதி நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது காகிதம் இல்லாத பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பட்ஜெட் தொற்று காரணமாக பேப்பர்லெஸ் ஆக தாக்கல் செய்யப்பட்டது, இந்த ஆண்டு தொடரப்பட்டது.

யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்
இதை தொடர்ந்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் பட்ஜெட் அறிக்கை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்-ல் பட்ஜெட் முடிந்த கையோடு பதிவேற்றம் செய்யப்படும்.

அல்வா விழா
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் மத்திய நிதியமைச்சகத்தின் அல்வா விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களோடு யூனியன் பட்ஜெட் அச்சக உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் தயாரிப்புக் குழு
இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் இருந்தவர்களின் பட்டியல் டிவி சோமநாதன் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா இவர் மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஆவார், அனந்த நாகேஸ்வரன் இவர் மத்திய அரசின் லைமை பொருளாதார ஆலோசகர் ஆவார், துஹின் காந்தா பாண்டே இவர் மத்திய முதலீட்டாளர் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) துறையின் செயலாளர் யார், அஜய் சேத் இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் ஆவார், விவேக் ஜோஷி இவர் நிதி சேவைகள் துறையின் செயலாளர் ஆவார்.