
மன்னித்து விடுங்கள் வேறு வழியில்லை
வணிக கூட்டம் என நினைத்து காலை 7.30 மணிக்கே கான்பரன்ஸ் அறைக்கு வந்த ஊழியர்கள், தங்களது மேலாளர்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழியில்லை என கூறி வலுக்கட்டாயமாக பணி நீக்கமும் செய்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு Best of Luck என கூறி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு
இதேபோல ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஊழியர்களையும் காலை 7.30 மணிக்கே, மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உடனடியாக வெளியேறலாம்
மற்ற பிராந்தியங்களில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் விடுமுறை நேரத்தில் இருப்பதால், இது குறித்த தகவல்கள் எதுவும் ஊழியர்கள் முன் கூட்டியே அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறவோ அல்லது சக ஊழியர்கள் வரும் வரையில் காத்திருக்கவோ வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டேவிட் இடிப்பு நாள்
இது குறித்து நிறுவனம் அறிவித்தது, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இது மிக கடினமான நேரம். எங்களின் அனைத்து ஊழியர்களின் பங்களிப்பு குறித்து நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம். கோல்ட்மேன் சாஸ்ஸ்-ன் இந்த பணி நீக்கமானது “டேவிட்’ஸ் டெமோலிஷன் டே” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தியர்களும் பாதிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. இதனால் உலகளாவிய அளவில் இந்திய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில பாதிக்கப்பட்ட ஐஐடி மற்றும் ஐஐஎம் பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினரின் மோசமான நிலையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

காரணிகள் எதுவும் மாறவில்லை
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பதற்றம், பணவீக்கம், வட்டி அதிகரிப்பு, சீனாவில் விமானத்தின் தாக்கம் என பல காரணிகளும் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக ரெசசன் அச்சம் நிலவி வருகிறது. ஏற்கனவே சில நாடுகள் ரெசசனுக்குள் நுழைந்துள்ளன. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.