
பொழுது போகவில்லை என்று சோஷியல் மீடியா பக்கம் சென்றால் இப்போதெல்லாம் அடிக்கடி கண்களில் தென்படுவது புதிர்கள் அல்லது சவால்கள் அடங்கிய ஆப்டிகல் இல்யூஷன்கள் தான். வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை சோஷியல் மீடியாக்களில் பல தரப்பினரையும் கவரும் வைரல் விஷயமாக இருந்து வருகிறது ஆப்டிகல் இல்யூஷன்கள்.
நெட்டிசன்கள் மத்தியில் ஒரு சில விஷயங்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும். அந்த ஆப்டிகல் இல்யூஷன்களில் பெரும்பாலானவை யூஸர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி விடுகின்றன. இதற்கு காரணம் ஆப்டிகல் இல்யூஷன்கள் நமது கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுவதோடு மூளை மற்றும் கண்களுக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுக்கிறது. இதனால் அவை நம்மை சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கின்றன.
இதையும் படியுங்கள்: Optical Illusion : இந்த கிளியின் கண்ணை 15 வினாடிகள் பாருங்கள், அற்புதமான மாற்றம் தெரியும்
பார்வை திறன் கூர்மையாக்க மற்றும் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும். தற்போது இங்கே நாம் மிகவும் சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் இல்யூஷன் ஒன்றைப் பார்க்கப் போகிறோம். இதில் பல கார்கள், வாகனங்கள் மற்றும் பல மரங்கள் அடங்கி உள்ளன. இவற்றுக்கு இடையில் கார் சாவி ஒன்று மறைந்துள்ளது. அதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஆப்டிகல் இல்யூஷனில் பல வாகனங்கள், மரங்கள் தவிர ஸ்டார்ஸ் மற்றும் ஜிக்ஜாக் பேட்டர்ன்ஸ் போன்ற சின்னங்கள் மற்றும் பல எலிமென்ட்ஸ் என இவை அனைத்தும் இந்த ஒரே இமேஜில் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு இடையே மறைந்திருக்கும் கார் சாவி கண்டுபிடிப்பது மிகவும் சவாலான ஒன்று தான்.
இந்த இமேஜில் இருக்கும் பல விஷயங்கள் நம் கவனத்தை சிதறடிக்கும் என்பதால் அந்த கார் சாவியை கண்டுபிடிக்க உங்களுக்கு அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் இந்த இமேஜில் மறைந்திருக்கும் கார் சாவியை கண்டறிய உங்களுக்கான நேரம் வெறும் 20 வினாடிகள் மட்டுமே. 20 வினாடிகள் அதிகம் அதற்குள்ளாகவே கார் சாவியை கண்டுபிடித்து விடுவேன் என்று உங்கள் மனதில் தோன்றினால், கீழே இருக்கும் இமேஜை பாருங்கள்…
கொடுக்கப்பட்ட 20 வினாடிகள் என்ற காலக்கெடுவிற்குள் உங்கள் கார் சாவியைக் கண்டுபிடித்தால், உண்மையில் நீங்கள் சிறந்த மற்றும் கூர்மையைக் கவனிப்பதற்கான திறன்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவேளை 20 வினாடிகளுக்குள் உங்களால் மறைந்திருக்கும் கார் சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம். ஏனெனில் இதனை முயற்சித்த 1 – 2% நெட்டிசன்கள் மட்டுமே குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிலை கண்டுபிடித்து உள்ளனர்.
இப்போது ஒரு க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறோம். இமேஜின் கீழ் இடது பக்கத்தில் கவனம் செலுத்துங்கள். அங்கிருக்கும் ஒரு கிரண் வாகனத்தில் தான் நீங்கள் கண்டறிய வேண்டிய சாவி இருக்கிறது. இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இமேஜை இடமிருந்து வலமாகவும் பின் மேலிருந்து கீழாக ஒருமுறை பார்க்கவும். இப்போது உங்களால் சாவியை கண்டறிய முடியவில்லை என்றால், கீழே பதில் வட்டமிடப்பட்டுள்ள இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: