
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வந்த பிறகு உலகமே நமது கைகளுக்குள் வந்துவிட்டது. ஸ்மார்ட் போன் வருகைக்கு முன்பு 100 தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு கூட இப்போது தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் எண்கள் கூட மனப்பாடமாக தெரியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன்கள் நம்மை சோம்பேறிகளாக இருக்கிறது. அதிலும் எதெற்காட்டினாலும் ‘ஆப்’ என்ற நிலை தான் இன்றும் நம்மை பாடாய் படுத்துகிறது.
‘ஆப்’ இல்லாமல் நமக்கு அசைவே இல்லை எனலாம். அதனால் தான் நம் மொபைல் போன் ஸ்கிரீன் முழுவதும் ஆப் நிரம்பி கிடக்கிறது. அதே நேரம் எல்லோராலும், எல்லா நேரமும் எல்லா ஆப்களும் வெளிப்படையாக பயன்படுத்த முடியாது. அது சங்கடத்தைதான் உருவாக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர் அல்லது சக பணியாளர் என்று மற்றவர்களுடன் அடிக்கடி உங்கள் போனை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், உங்களுக்கு தேவையான சேவை தான் இது. நம் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்களை மறைத்து வைத்து பயன்படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா. முடியும்… எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
மொபைல் ஆப்ஸ்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஹோம் ஸ்கிரீன் டிஸ்பிளே (முகப்புத் திரைக் காட்சி), ஆப் டிராயர் (ஆப் டிராயர்) அல்லது ஆப்ஸ் லாஞ்சர் (ஆப்ஸ் லாஞ்சர்) போன்ற ஏதேனும் ஒரு ஆப்சன் இருக்கும். இவை ஏதாவது ஒன்றின் மூலம் பயன்படுத்தும் செயலிகளையும் நாம் மறைத்துவைத்து பயன்படுத்த முடியும். இதற்கு ஒவ்வொரு போனிலும், ஒவ்வொரு ஓஎஸ்-சிலும் பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
16 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள்.. ஒரே இரவில் வெளியே அனுப்பிய கூகுள்!
ஆண்ட்ராய்டு போனின் வெர்ஷனை பொறுத்து அப்ஸ்களை மறைப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் பயன்பாடுகளை மறை அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் சாம்சங், ஒன்பிளஸ், பிக்சல் என்று எந்த ஆண்ட்ராய்டு பிராண்ட் பயன்படுத்தினாலும், ஆப்ஸ்களை மறைக்க முடியும். இது இல்லை என்றால், ஆப்ஸ்களை மறைப்பதற்கான மாற்று முறை, போன் லாஞ்சர் ஆப்ஸ்-பயன்படுத்தலாம். சீக்ரெட் போல்டர் உருவாக்குவதன் மூலம் ஆப்ஸ்களை மறைக்க இவை உங்களை அனுமதிக்கின்றன.
பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்கள் ஹோம் ஸ்கிரீன் செட்டிங்ஸில் இருந்து ஆப்ஸ்களை மறைக்க அனுமதிக்கின்றன. செட்டிங்ஸ் மெனு ஓபன் செய்து மறை என்று டைப் செய்தால் போதும் எதையெல்லாம் ஹைடு செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்து மறைத்து வைத்துக் கொள்ளலாம். மற்றொரு வழி செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று கீழே குரோல் செய்து ஹோம் ஸ்கிரீன் விருப்பத்தை தேர்வு செய்த பிறகு செயலிகளை மறை என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் அம்சங்களை கிளிக் செய்யவும். மறைக்கப்பட்ட ஆப்ஸ்கள் ஹோம் ஸ்கிரீன் மெனுவில் தோன்றாது.
இப்படி உங்கள் போனில் உள்ள ஆப்ஸ்களை ஈஸியாக மறைத்து வைத்து பயன்படுத்தலாம். சில போன்களில் மறை பயன்பாடுகள் விருப்பம் பாதுகாப்பு அல்லது பயன்பாடுகள் ஆப்ஷனின் கீழ் இருக்கும். இதேபோல், App Lock என்ற ஆப்சனும் சில போன்களில் இருக்கும். இதன் மூலம் உங்கள் செலிகளை மறைக்காமல், அதற்கு PIN நம்பர் செட் செய்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: