
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்தார். தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படத்தில் இந்துஜா, எல்லி அவ்ரம் உள்ளிட்ட இரண்டு கதாநாயகிகள் நடித்தனர். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காய்தம் போன்ற ராவண படங்களை இயக்கிய அருணுடன் முதன்முறையாக தனுஷ் இணைந்துள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக பீரியட் பிலிமாக இந்தப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.
தனுஷ்: ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?: வெளியான லேட்டஸ்ட் தகவல்.!
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
RK Suresh: புதிதாக பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்: நடிகர் ஆர்.கே. சுரேஷ் உருக்கம்.!
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தனுஷ் நீண்ட தலைமுடியுடன், கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ள கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.