
புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது என்றால், கர்ப்பவாய் புற்றுநோயை மட்டும் தடுப்பூசி மூலம் தடுக்க முடியும். HPV என்ற வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய புற்றுநோய்க்கு ஏற்கனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கர்ப்பவாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹெச்பிவி வாக்சின் என்ற தடுப்பூசியை பெண்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முக்கியமான அங்கமாக, இந்திய அரசாங்கம் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்க உள்ளது.