
Chat GPT3 Wharton MBA: 2023 தொடக்கத்தில் இருந்து, Chat GPT எனப்படும் ஆன்லைன் மென்பொருள் செயலி உலகின் அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. மனிதர்களாகிய நாம், நமது புலனுர்வுகளின் மூலம் பெறும் தகவல்களை அடிப்டையாகக் கொண்டு இந்த உலகைப் புரிந்து கொள்கிறோம், கட்டமைக்கிறோம். உதாரணமாக, ஒரு பொருளின் (எ.கா: கார் ) நீலம், உயரம், உயரம், எடை உள்ளிட்ட பண்புகளைக் (தகவல்கள்) கொண்டு அந்த பொருளைப் பற்றிய அறிவை உருவாக்குகிறோம். அதேபோன்று, தான் இந்த Chat GPT ஆன்லைன் செயலியும்.
இந்த செயலி, இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை எடுத்துக் கொண்டு, பகுப்பாய்வு செய்யும் அறிவுசார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. நமது கேள்விகளுக்கு, பதில்களை ஆகச் சிறந்த வர்ணனையுடன் வாக்கியங்களாகத் தருகிறது. இன்றைய சமகால பின்னணியில், நாம் கற்பனை செய்துள்ள யதார்த்தத்தைவிட இந்த செயலி பலமடங்கு சக்தியுடையதாக உள்ளது என பல்வேறு ஆய்வறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) படிப்பை வழங்கும் wharton பள்ளியின் பேராசிரியர், Christian Terwiesch இந்த செயலி குறித்த முக்கிய ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். எம்பிஏ படிப்பில் செயலாக்க மேலாண்மை (செயல்பாடு மேலாண்மை) என்பது முக்கிய பாடமாக உள்ளது. இந்தப் பாடத்தில், இறுதி ஆண்டுத் தேர்வை Chat GPT3 எழுதி தகுதி பெறுமா? (GPT3 அரட்டையில் வார்டன் எம்பிஏ பெறுவீர்களா?? – கட்டுரைத் தலைப்பு) என்ற ஆய்வு செய்யப்பட்டது.

ஆண்டு வருவாய் 30 லட்சம் அமெரிக்க டாலர் பெற, நிறுவனத்தின் கொள்முதல் தொடங்கி விற்பனை விவரம், இருப்பு நிலைமை என ஒட்டுமொத்த வர்த்தக செயல்பாடுகளை விவரமாக தெரிவிக்கிறது.

வாக்குச் சாவடியில், வாக்காளர்களின் காத்திருப்பு நேரம் தொடர்பான கேள்விக்கு இந்த செயலி அளித்த பதில்.
இதையும் வாசிக்க: உலகை நடுங்க வைக்கும் Chat GPT.. இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிடுமா?
இந்த தேர்வில் Chat GPT செயல்பாடுகள் குறித்து ஆய்வாளர் தெரிவிக்கையில், ” தேர்வில் B முதல் B வரையிலான மதிப்பெண் அளவு Chat GPT3 எட்டியுள்ளது. இந்த செயலி தனது முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறது. வணிக மேலாண்மையில் இந்த செயலி முக்கியத்துவமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: