
Chat GPT என்பது ஆன்லைன் (Online Chatbot) செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும். அதாவது, கூகுள் தேடுபொறித் தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உள்ள தகவல்களை நாம் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், இந்த Chat GPT பயனர்களின் கேள்விக்கு விரிவான முறையில் பதில் அளிக்கிறது.
உதாரணமாக, பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலையை, மறைந்த உலகப் புகழ்பெற்ற அயர்லாந்து நாடக ஆசிரியர் ஆஸ்கார் வைல்டு-வைப் போல் விவரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு இந்த மென்பொருள் அளித்த பதில் கீழ் வருமாறு:
அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் தகுதி பெறுவதற்கு Advanced Placement(AP) Exams என்ற தேர்வு நடத்தப்படுகிறது. பயனர் ஒருவர், இந்த தேர்வின் சாயலில், இயற்பியல் பாடத்தில் கேள்வி முறையை அமைக்க முடியுமா என்று கேட்டிருந்தார். அதற்கு, Chat GPT அளித்த பதில் பின்வருமாறு:
வகுப்பறையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை எந்தெந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்ற பயனரின் கேள்வி ஒன்றுக்கு, இந்த மென்பொருள் சரியான பகுப்பாய்வுகளுடன் மிகவும் திறனான பதிலை அளித்துள்ளது.
நாம் வாட்ஸ் ஆப் செயலியில் சில வார்த்தைகளை அடித்துக் கொண்டிருக்கும் போது, autocomplete முறை மூலம் அந்த வார்த்தை நிறைவு செய்யப்படும். நாம் முன்னர் பயன்படுத்திய வார்த்தைகளில் இருந்து வாட்ஸ் ஆப் செயலி இந்த வார்த்தையைக் கற்றுக் கொள்கிறது. அதே போன்று தான் Chat GPT செயலியும். இது, இணையத்தில் கொட்டிக் கிடக்கும் பெருந்தகவல்களைக் கொண்டு, மனிதர்கள் போலவே அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குகிறது.
வீட்டுப் பத்திரம், தொழில்களுக்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்வது, காதல் கடிதம் எழுதுவது, மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் முடிப்பது, ஜாவா கோடிங் செய்வது என பலதரப்பட்ட பணிகளை இது செய்து வருகின்றது.
ஆட்குறைப்பு:
அமேசான், கூகுள், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் என உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வர்த்தக சரிவு இதற்கு முக்கிய காரணியாக தெரிவித்தாலும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டு வரும் பெரு வளர்ச்சிகளும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும், தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. குறைந்தளவான ஊழியர்களைக் கொண்டு அதிகப்படியான உற்பத்தி முறையை நோக்கி பெருநிறுவனங்கள் செல்கின்றன.
விவசாயத் துறையில் உடல் உழைப்பே முக்கியத்துவம் பெற்றிருந்தது. அடுத்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் மனிதனின் அறிவுக்கும், திறனுக்குமே (White Collar Workers) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் அடுத்த பரிணாமமாக உருவெடுக்கும் இந்த Chat GPT தொழில்நுட்பம் நாட்டின் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, வணிகம், விளம்பரம், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் இந்த Chat GPT பல்வேறு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் வாசிக்க: அதிக சம்பளம் தரும் வேலைக்கு மாற வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத்தான்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.