
3 நாட்கள் அலுவலகம் வரணும்
இந்த மெயில் மேற்கோண்டு அருகில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திற்கு, வாரத்தில் சராசரியாக மூன்று நாட்கள் ஊழியர்கள் வர வேண்டும் என தெரிவித்தார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், செயல் இயக்குனருமான என் கணபதி சுப்பிரமணியம், முன்னதாக நிறுவனம் 25/25/25 மாதிரியினை ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போன்றவால் வந்த வினை
பள்ளியில் இருந்து வீட்டில் பணியாற்றிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, அவர்களுக்கு ஹைபிரிட் முறையிலும், சில நிறுவனங்கள் படிப்படியாக அலுவலகத்திற்கு ஊழியர்களை அழைத்து வருகின்றன. அந்த வகையில் டி.சி.எஸ் அந்த ஊழியர்களுக்குக் கொடுத்த அறிவிப்பு 25/25/25 மாதிரியினை 2025-க்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

25/25/25 மாதிரி
அதன் படி மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும். அதேபோல 25% பணி நேரத்தை மட்டுமே உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் செலவிட வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும் எனபது தான் இதன் முழு திட்டம். டிசிஎஸ்-ன் 25/25/25 மாதிரி பல பதில்களை பெற்றது.

இது சரிபட்டு வராது?
இதற்கிடையில் அலுவகத்தில் இருந்து பணிபுரிவதற்கான புள்ளிகள், அப்ரைசல் சிஸ்டத்தில் சேர்ப்பது ஒரு பணியாளரின் அளவை சரியாக மதிப்பிடுவதற்கு உதவாது என்ற கருத்தினையும் CIEL HR சேவைகளின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித்யா நாராயணன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

முடிவின் அடிப்படையில் தீர்மானிக்கனும்
ஒரு ஊழியரின் செயல்திறன் என்பது அவர்கள் உருவாக்கும் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அளவிடப்பட வேண்டும். அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிகிறார்களா அல்லது தொலைதூரத்தில் இருந்து பணிபுரிகிறார்களா? என்பதை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இலக்கு எட்டப்படவில்லை எனில்?
அலுவகத்தில் இருந்து பணிபுரியும் பணியாளர்களும் அவர்கள் இலக்கை அடையாமல் இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் பணி புரிந்ததற்காக அவர்களுக்கு சாதகமான அறிவிப்பை கொடுப்பது சரியானதாக இருக்காது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவாது. நிறுவனம் ஊக்குவிக்க உதவாது என்றும் கூறுகிறார்.

இது தான் காரணமா?
பெருந்தொற்றுக்கு பிறகு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை விரும்பாத நிலையில், அவர்களை ஊக்குவிக்கும், அலுவலகத்திற்கு வரவைக்கும் நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது எனலாம். இந்த நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க உதவுகிறது.

உண்மை என்ன?
ஒரு புறம் 25/25/25 திட்டத்தினை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறி வரும் நிலையில், மறுபுறம் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனம் கூறுவது 25/25/25 மாடலை கடைபிடித்தால், அதிக நாட்கள் நிறுவனத்திற்கு வந்து பணிபுரிய முடியாது. அப்போது எதிர்கால நலனில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டால் மட்டுமே உண்மை நிலவரம் என்பது முழுமையாக தெரியவரும் எனலாம்..