
பெரும் பணக்காரர்கள்
உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்கள் தாங்கள் செய்யும் வரத்தகத்தின் வாயிலாக, பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் சார்ந்து சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதன் மூலம் ஒரு நாட்டின் முன்னணி நிறுவனங்கள், காலம் காலமாகப் பணக்காரர்களாக இருப்பவர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தனிப்பட்ட வரி
இந்த நிலையில் பணக்காரர்கள் மீது தனிப்பட்ட வரி விதித்து அந்த ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அமெரிக்காவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைக்கப்படும் நிலையில் அந்நாட்டு அரசு இதற்கான உறுதியான முடிவையும், கருத்தையும் வெளியிடாமல் உள்ளது.

இந்திய பணக்காரர்கள்
இந்த நிலையில் இந்திய பணக்காரர்கள் மீது பிரத்தியேகமாக வரி விதித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என உலகப் பொருளாதார அமைப்பின் உரிமை குழுவான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மாத சமத்துவமின்மை அறிக்கையின் ஒரு பகுதி இந்தியாவுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது.

டாப் 5 சதவீத பணக்காரர்கள்
இந்தியாவில் இருக்கும் டாப் 5 சதவீத பணக்காரர்களிடம் மட்டுமே மொத்த செல்வத்தில் 60 சதவீதம் உள்ளது. இந்த நிலையில் டாப் 10 பணக்காரர்கள் மீது 5 சதவீத வரி விதிக்கப்பட்டாலே இந்தியாவில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்த் டாக்ஸ்
இந்தியாவில் தற்போது வெல்த் டாக்ஸ் என்ற கான்செப்ட் நடைமுறையில் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் பணக்காரர்கள் மற்றும் ஏழை மக்கள் மத்தியில் ஏற்படும் வித்தியாசம் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அமெரிக்கா பிரிட்டன் போல இந்தியாவும் வெல்த் டாக்ஸ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கலாம்.

வெல்த் டேக்ஸ் சட்டம் 1957
இந்தியாவில் வெல்த் டேக்ஸ் சட்டம் 1957-ன் கீழ் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகச் சொத்து மதிப்பு உடைய செல்வந்தர்கள் மீது 1 சதவீதம் விதிக்கப்படும் முறையை இந்தியா வைத்திருந்தது. ஆனால் இது 2015 மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு நீக்கப்பட்டது.

அருண் ஜெட்லி
28 பிப்ரவரி 2016 அன்று அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த 2016 – 2017 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெல்த் டாக்ஸ் ரத்து செய்யப்பட்டது. வெல்த் டாக்ஸ் -க்கு பதிலாக 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட அனைவருக்கும் 2 சதவீதம் கூடுதல் சர்சார்ஜ் (அதிக கட்டணம்) கட்டணம் விதிக்கப்பட்டது.

போதுமான நடவடிக்கை
இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் வரிவிதிப்பு முறை தற்போது முற்போக்கானதாக இல்லை. அதாவது 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் மீதான வரி நீக்கப்பட்ட நிலையில் அதை ஈடு செய்ய போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பணக்காரர்கள் எண்ணிக்கை
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு 102 பில்லியனர்கள் இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு 166 ஆக உயர்ந்துள்ளது. இதுவே மில்லியனர்கள் எண்ணிக்கையை கணக்கெடுத்தால் தலைசுற்றிவிடும். மேலும் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு தற்போது 660 பில்லியன் டாலராக உள்ளது.

18 மாதத்திற்கான பட்ஜெட்
அதாவது 54.12 லட்சம் கோடி ரூபாய், இந்தப் பணத்தை வைத்து அடுத்த 18 மாதத்திற்கான நாட்டின் பட்ஜெட் திட்டத்தைத் திட்டமிடுங்கள். இந்த மக்கள் தொகையில் பொருளாதார அடிப்படையில் பிரித்தால் கீழ் மட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் பேரின் ஒட்டுமொத்த செல்வம் வெறும் 5 சதவீதம் மட்டுமே.

ஏழை மக்கள்
இந்த ஆக்ஸ்பாம் தெரிவிக்கிறது இந்தியாவின் 50% ஏழை மக்கள் மறைமுக வரிகள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த அறிக்கையின்படி மொத்த ஜிஎஸ்டி வரியில் கிட்டதட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64.3 சதவீத வரி ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50% மக்களிடமிருந்து வருகிறது. நடுத்தர பிரிவில் 40 சதவீத மக்களிடம் இருந்து மூன்றில் ஒரு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது
இதே நேரம் 10 சதவீத பணக்காரர்களிடமிருந்து வெறும் 3-4 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே வருகிறது.