
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த பூஜை நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர்கள் விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இதில் கலந்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ‘தங்கலான்’ டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் துவங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. பல்வேறு காரணங்களால் இந்தப்படம் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் விக்ரம், கெளதம் இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசியானார்கள்.
Thalapathy Vijay: மீண்டும் இணையும் ‘வாரிசு’ கூட்டணி: பதறும் தளபதி ரசிகர்கள்.!
இந்நிலையில் கடந்த இறுதியில் இந்தப்படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து விரைவில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Thunivu Collection: வசூலில் மாஸ் காட்டும் ஏகேவின் ‘துணிவு’: வாரிசை முந்தியதா.?
விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விக்ரமின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வரும் ஏப்ரலில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.