
‘சினிமா லவ்வர்ஸ் டே’ தினத்தை முன்னிட்டு வெறும் 99 ரூபாய்க்கு திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க முடியும் என்ற செய்தி, சினிமா ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
PVR சினிமாஸ் அறிக்கைகளின்படி, ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தவே ஆஃப் வாட்டர், வாரிசு, துணிவு போன்ற புதிய படங்களை ரசிகர்கள் குறைந்த விலையில் பார்க்கலாம். ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: திவே ஆஃப் வாட்டர் அமோக வரவேற்பைப் பெற்று இந்தியாவில் ரசிகர்களுக்கு பிடித்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் வசூலை முறியடித்து இதுவரை 471 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சிகள், ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களுக்காக படம் பாராட்டப்பட்டது.
டிக்கெட் விலைக் குறைப்பு திரைப்படங்களை அதிக பார்வையாளர்கள் பார்க்க வழி செய்வதோடு, அனைவரையும் திரையரங்கு நோக்கி நகர்த்தும். ‘உலக சினிமா தினத்தில்’ டிக்கெட் விலை 75 ரூபாயாகக் குறைக்கப்பட்டபோது இதேபோன்ற போக்கை காண முடிந்தது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் மல்டிபிளக்ஸ் அனுபவத்தைப் பெற உதவியது.
கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவி – வைரலாகும் வீடியோ
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில், அதைக் காண திரையரங்கிற்கு படையெடுத்துள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் டிக்கெட் விலை குறைப்பு, அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.