
கோவை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, பிளஸ் 1, பிளஸ் 2 என மூன்று பிரிவுகளில் 207 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி: கோவை மாவட்டத்தில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் 1.03 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளிலும், வட்டார அளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற 12,364 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட அளவில் 438 மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில், 197 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து அதிக வெற்றிகள் பெற்று, கோவை மாவட்டம் முதலிடம் பிடித்தது.
சேலம் இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மூன்றாம் இடமும் பிடித்தன. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரின் ஊக்குவிப்பு ஆகியவை மாணவர்கள் அதிக வெற்றிகளை பெற ஊக்கமளிப்பதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.