
கோவை: கோவை சவுரிபாளையத்தில் உள்ள அத்வைத் தாட் அகாடமியில், 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் எம்.சிரீஷ், கராத்தே போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு அளவில் ஃபைட்டர்ஸ் அகாடமி நடத்திய பாரம்பரிய கலைத் திருவிழா, கோவை கணபதியில் உள்ள சிஎம்எஸ் சர்வதேசப் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில், கட்ட பிரிவில் ஒரு மணி நேரம் தொடர்ந்து பல்வேறு ‘ஸ்டெப்’களை செய்து, எம்.சிரீஷ் புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் ‘நோபுள் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு 2023’-ல் இடம் பிடித்தார். மேலும், 12-வது தென்னிந்திய அளவிலான ஓபன் இன்விடேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். சாதனை மாணவன் எம்.சிரீஷை, பள்ளி முதல்வர் எச்.ஜெய ஸ்ரீ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.