
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது என சிபிஎம் தெரிவித்தார். ‘பல மொழிகளில் வெளியாகும் தீர்ப்புகளை சாதாரண மக்களும் படிக்கவும் பொது விவாதத்தில் பங்கெடுக்கவும் தூண்டுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய மொழிகளில் நடப்பதை சாத்தியமாக்கிட நீதித்துறை முன்வர வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், தாய்மொழி நிர்வாகம் என சிபிஎம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுத்து அதிகார சக்திகள் பேசி வரும் சூழலில் இந்த நடவடிக்கை முக்கியமானது’ என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டிவிட் செய்துள்ளார்.