
தள்ளுபடி விலையில் இறக்குமதி வரி
குறிப்பாக இந்தியா, சீனா என சில நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் சப்ளை செய்து வருகிறது. இது வரலாறு காணாத அளவுக்கு இறக்குமதியினை செய்துள்ளது. தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தள்ளுபடி விலையில் இறக்குமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

இன்னும் மலிவான எண்ணெய் அதிகம் கிடைக்கலாம்
அடுத்த மாதம் இன்னும் விலை மலிவான கச்சா எண்ணெய், இந்தியாவுக்கு அதிகளவில் கிடைக்கலாம் என நிபுணர்கள் அதிகாரி. ஏனெனில் ரஷ்யா ஐரோப்பாவுக்கு கடல் வழியாக அனுப்பப்படும் கச்சா எண்ணெய் மொத்தமாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவுக்குச் சிக்கல் அதிகரிக்கலாம் என்றாலும், ஐரோப்பாவுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் ரஷ்யா உள்ளது. அப்படி இல்லாவிட்டால் தனது உற்பத்தியினை குறைக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

இந்தியா சீனா முக்கிய வாடிக்கையாளர்கள்
அப்படி நிறுத்தினால் சர்வதேச கச்சா எண்ணெய்யை அதிகரிக்க ஒபெக் நாடுகள் தீர்மானிக்கலாம்.
எப்படியிருப்பினும் இன்றைய காலகட்டத்திலும் பற்பல சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா சீனா என்பது ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆக இவர்களுக்கு சப்ளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் முக்கியமான வர்த்தக பங்காளிகளாக சீனாவும் இந்தியாவும் மாறிவிட்டன.

தேவை அதிகரிக்கலாம்
தற்போது சீனா கட்டுப்பாட்டில் தளர்வினை அளித்துள்ள நிலையில், எரிபொருள் தேவையானது அதிகரிக்கலாம். இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு காணாத அளவுக்கு இறக்குமதி
இந்தியா ரஷ்யா எண்ணெய் அதிகளவில் வாங்கி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்கி, அதனை சுத்திகரிப்பு செய்து சப்ளை செய்வதாக குற்றசாட்டுகள் வருகின்றன. எனினும் இதனை கண்டு கொள்ளாத இந்தியா தொடர்ந்து சப்ளை செய்து வருகிறது.

வரலாறு காணாத இறக்குமதி
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. கார்டெல் உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 62% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளில் இருந்த நிலையில் 71% அளவுக்கு அதிகமாக இருந்தது.

தொடர்ந்து அதிகரிக்கலாம்
இந்தியா தொடர்ந்து சவுதி அரேபியாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதியினை எப்போதும் போல தொடரலாம் என்றாலும், ரஷ்யாவிடம் இருந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சந்தர்ப்பவாத செயல் என்றாலும், இந்தியாவுக்கு தேவை அதிகம் உள்ள நிலையில், இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.