
தனுஷ் நடித்து இயக்கத்தில் இருக்கும் அவரது 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கி வருகிறது.
‘பா பாண்டி’ என்ற படத்திற்குப் பின் தனுஷ் இந்த படத்தை இயக்குவதோடு சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தனுஷ் மற்றும் அனிருத் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்த ‘திருச்சிற்றம்பலம்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ‘D50’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் போட்டோஷூட் நடந்ததாகவும், அதில் தனுஷ், அனிருத் கலந்து கொண்டதை எடுத்து மீண்டும் தனுஷ் அனிருத் இணைவது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
‘புதுப்பேட்டை’ ஸ்டைலில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.