
சீனாவுக்கு மாற்று இந்தியா
அமெரிக்காவுக்கு சீனாவுக்கு இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக இந்தியாவினை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.
சீனாவின் நிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுள்ளது இந்தியா. தற்போது சீனாவில் மருந்தின் தாக்கத்தில் இருந்து வெளியேறி, கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன் காரணமாக தனது வளர்ச்சியினை மேம்படுத்தியுள்ளது.

இந்திய அரசு திட்டம்
அதேசமயம் இந்திய அரசு கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்ற நோக்கில், தீவிரமாக வருகின்றது. எந்த பிரச்சனையும் இல்லாமல், செமிகண்டக்டர் சப்ளை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது.
தற்போது சர்வதேச நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தங்களது உற்பத்தியினை மாற்ற திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

செமிகண்டக்டர் சந்தை
செமிகண்டக்டர் சந்தையானது அடுத்த தசாப்தத்தில் மேலும் வளர்ச்சிக்கு தயராக உள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையானது 2030 ஆம் ஆண்டில் 600 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு வளர்ச்சியைக் காணலாம் என கவுண்டர் பாய்ண்ட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சவால்
இதே இந்தியாவில் 2021 – 2026 ஆம் ஆண்டு செமிகண்டக்டர் சந்தையின் வருவாய் விகிதமானது 300 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது புவிசார் நிலை சாதகமாக இருந்தாலும், செமிகண்டக்டர் உற்பத்திக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லை எனலாம். இதற்காக இந்தியா பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது.

அரசின் முயற்சி
இந்தியாவில் இதுவரை சீனாவில் இருந்து பெரியளவிலான செமிகண்டக்டர் நிறுவனங்களை ஈர்க்கவில்லை. எனினும் முன்பை காட்டிலும் உற்பத்தியினை ஈர்க்கும் முயற்சியினை எடுத்து வருகின்றது. குறிப்பாக அரசின் பிஎல்ஐ திட்டம் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை அளிக்கும். இதன் மூலம் மின்சார பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது.

பாக்ஸ்கான் உற்பத்தி சரிவு
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது திறன் 95% இல் இருந்து, 75% ஆக குறைந்துள்ளது. ஆக இந்த 20% இடைவெளியானது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கலாம். எனினும் இது வெறும் ஆரம்பம் மட்டுமே.
சீனா, தாய்வானுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க இந்தியா சரியான ஒரு இடமாக பார்க்கப்படலாம். இது நல்ல வாய்ப்பாக இருக்கலாம். இதே செலவு வாரியாக பார்க்கும்போது இந்தியா சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. ஆக இந்தியா விரிவாக்கம் செய்ய ஒரு வாய்ப்பாக அமையலாம்.

சீனாவின் செமிகண்டக்டர் வளர்ச்சி
சீனாவின் செமிகண்டர் துறையானது கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை கண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் செமிகண்டக்டர் வளர்ச்சி 13 பில்லியன் டாலர் மட்டுமே. இது உலகளாவிய சந்தையில் 3.8% மட்டுமே ஆகும். எனினும் 2020ல் செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சி 30.6% அதிகரித்து, 39.8 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என SIA ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாகவே தைவானை விஞ்சியது.
எது எப்படியோ சீனாவின் தாக்கம் என்பது இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.