
4 முன்னணி ஐடி நிறுவனங்கள்
இதை உறுதி செய்யும் வரையில் இந்தியாவின் 4 முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சிலில் பாரீக்
சிலில் பாரீக் தலைமையிலான இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக நிறுவனத்தில் சேர்க்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் 84 சதவீதம் சரிந்து வெறும் 1,627 ஆக உள்ளது, கடந்த காலாண்டில் இதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அட்ரிஷன் விகிதம்
இதேவேளையில் இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் முந்தைய காலாண்டில் இருந்து 27.10 சதவீதத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் 24.3 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதால் வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கூற முடியும்.

9 காலாண்டில் மோசம்
இன்போசிஸ் நிறுவனம் கடந்த 9 காலாண்டில் குறைவான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது இந்த டிசம்பர் காலாண்டு தான். கடைசியாக ஜூலை – செப்டம்பர் 2021 காலாண்டில் 975 ஊழியர்களை மட்டுமே புதிதாகப் பணியில் சேர்த்தது. இந்தக் காலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
டிசம்பர் 2022 காலாண்டு முடிவில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,46,845 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரி 2023 ஆம் நிதியாண்டு இலக்கான 5000 ஊழியர்கள் சேர்ப்பை கட்டாயம் அடைந்து விடுவோம் எனத் தெரிவித்தார்.

டிசிஎஸ்
இதே போன்ற இன்போசிஸ்-ன் சக போட்டி நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது, ஆனால் 3வது காலாண்டில் 2,197 பேர் குறைந்துள்ளனர்.

டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் 28,238 ஊழியர்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆக குறைந்துள்ளது.