
நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பிற்காக மலேசியா சென்று படப்பிடிப்பின் போது விபத்தில் காயம் அடைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி, தற்போது சென்னை வந்துவிட்டதாகவும் கூறினார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார், அவருக்கு இரண்டு வாரங்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், கூடிய சீக்கிரம் ரசிகர்களிடம் அவர் வீடியோ மூலம் பேசுவார், ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம், விஜய் ஆண்டனி பற்றிய தவறான செய்திகளை நம்ப வேண்டாம் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.