
நடிகர் விஜய்யின் வாரிசு பட வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, தமன், நடிகை சங்கீதா போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் வம்சி, ”வாரிசு படம் அல்ல, இது ஒரு நம்பிக்கை. இது தளபதி விஜய் சார் என் மேல வச்சிருந்த நம்பிக்கை. தில் ராஜு சார் மற்றும் வாரிசு டீம் என் மேல வச்சிருந்த நம்பிக்கை. இன்று அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு நன்றி. விஜய் ரசிகர்கள் சேர்ந்து இந்த வெற்றியைக் கொடுத்திருக்கீங்க. இதற்காக இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
எப்பொழுதும் நினைத்துப்பார்க்க கூடிய படமாக இது இருக்கும் என விஜய்யிடம் கூறினேன். நீங்கள் அதை உண்மையாக்கியிருக்கிறீர்கள். எல்லோரும் என்னை தெலுங்கு இயக்குநர்னு சொல்லிட்டு இருந்தீங்க. அது என்னை காயப்படுத்தியது. நான் தமிழோ தெலுங்கோ இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். இன்னைக்கு தமிழ் மக்கள் அவங்க நெஞ்சில் ஒரு சிறிய இடம் கொடுத்திருக்கீங்க. அதற்கு நன்றி. இதுபோதும் எனக்கு.
நான் ஃபர்ஸ்ட்ல இருந்து சொல்லிட்டு இருக்கேன். இது பக்கா தமிழ் படம். இன்னைக்கும் அதையே தான் சொல்கிறேன். இது பக்கா தமிழ் சாப்பாடு. விஜய் சார் பத்தி எவ்வளவு சொன்னாலும் அது போதாது. அவர் தளபதி, அவர் பெரிய ஸ்டார். ஆனால் ஒரு மனிதராக அவரை அருகிலிருந்து நான் பார்த்திருக்கிறேன். அவர் என்னிடம், நீங்க சந்தோஷமா இருக்கீங்களா என தொடக்கத்திலிருந்தே கேட்டுவருகிறார். இப்போ சக்சஸ் பார்ட்டியில் சந்தித்தபோது, நான், நீங்க சந்தோஷமா இருக்கீங்களானு கேட்டேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். என பதிலளித்தார். இதுபோதும்பா என்று பேசினார்.
முன்னதாக சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தளித்துள்ளார். அதில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொண்டாட்டம் மிகவும் ரகசியமாக நடந்ததாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: