
குமுறும் அதானி
இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களில் இனியும் சற்றே ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப் பி ஓவிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமம் தரப்பில் ஹிண்டர்ன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கையானது அதானி குழும பங்குகளின் சரிவில் பலனடையத் தான் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சட்ட பூர்வ நடவடிக்கை
அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கையானது அதானி குழுமத்தின் நன் மதிப்பினை கெடுக்கும் விதமாக வந்துள்ளது. ஆக இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற தோனியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜதீன் ஜலுந்த்வாலாவின் கருத்து
அதானி குழுமத்தின் சட்டப் பிரிவு தலைவர் ஜதீன் ஜலுந்த்வாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி குழும பங்குகள் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்ற இறக்கம் என்பது ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் ஏற்பட்டது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த சரிவில் ஹிண்டன்பர்க் பலடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நிறுவனம் அதிர்ச்சி
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தலைமை நிதி அதிகாரி ஜுகேந்தர் சிங் தெரிவித்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை முன்னதாக கூறியுள்ளது.
இது அதானி குழுமத்தின் எஃப்.பி.ஓ-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி. அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டால் அதன் மூலம் பலனடைய திட்டமிட்டிருக்கலாம் என அதானி குழுமம் குற்றம் சாட்டியுள்ளது.

இது பொய்யானது?
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் வரவு செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், அதன் மூலம் பண பரிவர்த்தனை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்கே. இது குறித்து நிறுவனங்களிடம் எந்த அறிக்கையையும் சரிபார்க்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் எப்படி இது உண்மையாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ள நிலையில் இது உண்மையா? பொய்யா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஆக இதுவும் முதலீட்டாளர்களால் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. .