
செலவு அதிகரிப்பு
தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக குலோபல் சப்ளை சங்கிலி தாக்கத்தின் மத்தியில், பணவீக்கத்தின் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளது.
இதற்கிடையில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு (Colliers-CREDAI-Liases Foras) 2023ல், 43% டெவலப்பர்கள் மூலதன செலவு அதிகரிப்பு 10 – 20% செலவுகள் தங்களது திட்டங்களின் செலவு அதிகரித்துள்ளது.

வீடு தேவை
இந்த ஆய்வில் 341 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வானது கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் 43% டெவலப்பர்கள் வீடுகளுக்கு தேவையானது நிலையானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 31% பேர் தேவை 25% வரை அதிகரிக்கலாம் என நம்புகின்றனர்.

வீடுகளின் தேவை
முந்தைய ஆண்டு தேவையானது பெரும் அளவில் இருந்த நிலையில், விற்பனையானது வரலாறு காணாத அளவில் இருந்தது. இது கடந்த தசாப்தத்தில் மிக அதிகம் எனலாம். இதற்கிடையில் நடப்பு ஆண்டிலும் 70% அதிகமான டெவலப்பர்கள், வீட்டிற்கு தேவையானது 25% அதிகரிக்கலாம் என நம்புகின்றனர்.

அதிகரிக்கும் போட்டி
இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொடர்ந்து புதிய புதிய திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், போட்டியினை எதிர்கொள்ளும் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் 87% டெவலப்பர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வரும் மக்கள் தொகைக்கு மத்தியில் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நகரமயமாக்கலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையினை ஊக்குவித்து வருகின்றது. இனியும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்குவிப்பு சலுகைகள்
இதற்கிடையில் தங்கள் வணிகத்தினை மேலும் எளிதாக்க வரவிருக்கும் பட்ஜெட்டில் 40% டெவலப்பர்கள் அரசிடம் இருந்து ஊக்குவிப்பு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். 31% பேர் வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி-யில் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து அவரது வருகைக்கு பிறகு கடந்த ஆண்டு தான் ரியல் எஸ்டேட் வணிகமானது மீண்டும் வந்தது. எனினும் தற்போது நிலவி வரும் சர்வதேச மந்தநிலை காரணமாக அது இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியது.

விலை அதிகரிக்கலாம்
கூடாக இந்தியாவில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில், வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதமும் உச்சத்தில் காணப்படுகின்றது. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இப்படி ஒரு சவாலான நிறுவன டெவலர்ப்பர்கள் வீடுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இது மேலும் விற்பனையை குறைக்க வழிவகுக்கலாம்.
எது எப்படியோ வீடு அல்லது சொத்து வாங்க திட்டமிட்டவர்களுக்கு இது ஒரு கடினமான ஆண்டாகவே இருக்கலாம்.