
செஸ் விளையாட்டில் பல்வேறு நபர்கள் செய்துள்ள உலக சாதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிக முறை வென்றவர், தொடர்ச்சியாக வென்றவர் என்பது போன்ற பல்வேறு சாதனைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் செஸ் செட்டை அடுக்கி வைப்பதில் உலக சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடியுமா? ஆம்! உண்மைதான்! புதுச்சேரியை சேர்ந்த எஸ். ஒடிலியா ஜாஸ்மின் என்ற புதுச்சேரியை சேர்ந்த பெண்மணி அதி விரைவாக செஸ் செட்டை அடுக்கி வைத்து புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நொடிகள் 29.85 நொடிகள் ஆகும்.
கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எஸ். ஒடிலியா ஜாஸ்மின் செஸ் செட்டை அடுக்கிவைக்கும் வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் உலகிலேயே மிக விரைவாக செஸ் செட்டை அடுக்கியவர் என்று வாசகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த பெண் ஒரு கையால் செஸ் காயின் முழுவதையும் அடுக்குகிறார்.
ஆனால் உண்மையில் இந்த உலக சாதனை ஆனது தற்போது படைக்கப்பட்டது அல்ல. ஜூலை 20 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதில் ஓடிலியா ஜாஸ்மின் என்பவரால் 29.85 நொடிகளில் அதிவிரைவாக செஸ் செட் அடிக்க வைக்கப்பட்டுள்ளது .
பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 42 ஆயிரத்திற்கும் அதிகமான லக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை லைக்குகளும், பார்வைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த கமெண்ட் பகுதியில் பல்வேறு இணையவாசிகளும் இந்த உலக சாதனை செய்வதற்கு உண்டான விதிமுறைகளை கேட்டு தானும் அவ்வாறு செய்ய போவதாக நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.
அதில் ஒருவர் “தன்னால் இதைவிட வேகமாக செஸ் செட்டை அடுக்க முடியும்” என்றும், மற்றொருவர் “கடைசியாக என்னால் முறியடிக்க முடிந்த ஒரு கின்னஸ் உலக சாதனையை நான் பார்த்து விட்டேன்” என்றும் நகைச்சுவையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது என்பது ஓடிலியா ஜாஸ்மினின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. இந்த கின்னஸ் சாதனையை செய்வதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் முழுவதும் இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவருக்கு முன் இந்த பட்டமானது மற்ற நான்கு பேர் 31 நொடிகளில் அடுக்கி சாதனை படைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து 29.85 நொடிகளில் இந்த கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: