
விலை அதிகரிக்கலாம்
ஆக இதை தொடர்ந்து புதிய உச்சத்தினையே எட்டி வருகின்றதே, இந்த இடத்தில் வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்தில் தற்போது முதலீடு செய்யலாமா? வேண்டாமா? இது மேலும் ஏற்றம் காணுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்திய நிபுணர்கள் தொடங்கி சர்வதேச நிபுணர்கள் வரை, தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்தது என்று கூறி வருகின்றனர்.

வீழ்ச்சியின் பிடியில் சில நாடுகள்
பல வளர்ந்த நாடுகளும் தற்போது வீழ்ச்சியின் பிடியில் உள்ளன. குறிப்பாக சில நாடுகள் ரெசசனுக்குள் நுழையலாம் என்ற அச்சமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை கட்டுபடுத்தும் பணி நீக்க நட்வடிக்கையினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எதிர்பார்ப்பு இது தான்
எனினும் தற்போது பணவீக்கம் என்பது குறைந்து வரும் சூழலில், வட்டி அதிகரிப்பானது மெதுவாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டி விகிதமும் மெதுவாக படிப்படியாக அதிகரிப்பது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2023 – 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மாற்றமில்லாமல் தொடங்கி, நடுத்தர காலத்தில் குறைந்து, மீண்டும் வருட பிற்பகுதியில் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பிரச்சனைகள் இன்னும் முடியவில்லை
இன்று வரையில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என்பது முடிந்த பாடாக இல்லை. இது எப்போது முடிவுக்கு வரும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. பல நாடுகளும் தங்களது மத்திய வங்கிகளில் தங்கத்தின் இருப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
ஒரு நபர் தங்கத்திற்கு மாற்றாக கிரிப்டோகரன்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது கிரிப்டோக்களும் அமைதியாகி விட்டன. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம்.

இதனையும் தெரிஞ்சுக்கோங்க
எனினும் தங்கத்தினை ஒரு அசெட்டாக வைக்க முடியாது. ஏனெனில் இதன் மதிப்பு சப்ளை தேவையை பொறுத்து மாறுபடும். அரசியல் பதற்றங்கள் தாக்கத்தினை ஏற்படுத்தும். சர்வதேச பொருளாதாரத்தின் தாக்கம் இருக்கும். ஆக இதில் அதிக ஏற்ற இறக்கம் என்பது இருக்கும். திடீரென விலை ஏறும், விலை குறையும். ஆக இதனையும் மனதில் வைத்துக் கொண்டு வணிகம் செய்வது நல்லது.

காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்சூக்கு 3 டாலர்கள் அதிகரித்து, 1926.90 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே, வெள்ளி விலையும் அவுன்சூக்கு சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து, 23.957 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்றும் மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 119 ரூபாய் அதிகரித்து, 56,665 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் வகையில்வே காணப்படுகின்றது. நீண்ட நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 326 ரூபாய் அதிகரித்து, 68,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவும் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கி வைக்கலாம்.

ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமத்திற்கு 35 ரூபாய் அதிகரித்து, 5325 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 42,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலையானது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமத்திற்கு 38 ரூபாய் அதிகரித்து, 5809 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் அதிகரித்து, 58,090 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. இது கிராமத்திற்கு 1 ரூபாய் அதிகரித்து, 74.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 74,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: கிரேனியம் தகவல் தொழில்நுட்பங்கள், கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் ஏதேனும் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.