
அசெஞ்சர் தான் டாப்
அசெஞ்சர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 39.9 பில்லியன் டாலராகும். இது உலகின் மிக வலுவான ஐடி பிராண்டாக உள்ளது. பிராண்ட் ஸ்ட்ரென்ட் இன்டெக் குறியீட்டின் படி, இதன் மதிப்பெண் 100/87.8 ஆகும். இது AAA பிராண்ட் ரெட்டிங்கினையும் கொண்டுள்ளது.

டிசிஎஸ்
இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியாவின் மிக பிரபலமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் தான். இதன் சந்தை மதிப்பானது 2% அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 17.2 பில்லியன் டாலராகும். இது வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஏற்றவாறு ஒரு ஹைபிரிட் மாடலை பின்பற்றி வருகின்றது. மொத்தத்தில் சிறந்த இந்திய ஐடி நிறுவனமாக உள்ளது.

இன்ஃபோசிஸ்
மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியாவின் மிக பிரபலமான ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தான். இந்த நிறுவனத்தின் மதிப்பானது 13 பில்லியன் டாலராகும். இதுவும் கடந்த ஆண்டினை காட்டிலும் 2% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தினை 1981 ஆம் ஆண்டு நாராயண மூர்த்தி தொடங்கிய ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு AAA ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது..

ஐபிஎம் & ஜெப்ஜெமினி
இந்த டாப் 10 பட்டியலில் 4வது இடம் பிடித்திருக்கும் நிறுவனம் ஐபிஎம் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.6 பில்லியன் டாலராகும். இதே ஐந்தாவது இடத்தில் கேப்ஜெமினி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 9.8 பில்லியன் டாலராகும். இதே 6வது இடத்தில் NTT தரவு நிறுவனம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 8.9 பில்லியன் டாலராகும்.

ஹெச்.சி.எல் & விப்ரோ
7வது இடத்தில் காக்னிசண்ட் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8.6 பில்லியன் டாலராகும்.
ஷிவ் நாடாவின் ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் 8வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6.5 பில்லியன் டாலராகும், இதே
விப்ரோ நிறுவனம் 9வது இடத்தினை பிடித்துள்ள ஒரு நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 6.2 பில்லியன் டாலராகும்.
இதே 10வது இடத்தில் உள்ள நிறுவனம் FUJITSU 4.3 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு நிறுவனமாகும்.

சிறந்த பிராண்டாக மாறிய நிறுவனம்
இந்த சிறந்த பிராண்ட் மதிப்புடைய நிறுவனங்களில் 25வது இடத்தில் உள்ளது LTImindtree நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பானது கடந்த ஆண்டினை காட்டிலும் 75% அதிகரித்து, 1.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது எல் & சி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட் ட்ரீ நிறுவனங்கள் வெற்றிகரமாக கையகப்படுத்தப்பட்ட பிறகு இந்த அளவுக்கு சிறந்த மதிப்புள்ள ஒரு பிராண்டாக வளர்ச்சி கண்டுள்ளது.

டெக் மகேந்திராவின் மதிப்பு?
இதே மற்ற இந்திய நிறுவனங்களான டெக் மகேந்திராவின் சந்தை மதிப்பு 3.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டினை காட்டிலும் 15% அதிகரிப்பை கண்டுள்ளது.
இதேபோல மற்றொரு தகவல், உலகின் டாப் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சி ஐ ஓ முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.