
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை ஒட்டி கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை ஏற்க இந்த நாளில் உறுதியேற்கப்பட்டது. அதேபோன்று தேச கட்டமைப்பு, தாராள மனப்பான்மை, மத நல்லணிக்கம் ஆகியவை குறித்து இளைஞர்களின் மனதில் விதைக்கப்பட்டது.
எதிர்கால இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும் வகையில், ஆரோக்கியமான இளைஞர்களே இன்றைய தேவை என்ற கருப்பொருளின் அடிப்படையில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இளைஞர்கள் தங்களுடைய உடல்நலன் குறித்து அக்கறை செலுத்துவது முக்கியம்.
40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 7இல் ஒருவருக்கு இதயம் தொடர்பான நோய்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஹார்ட் அட்டாக் அபாயம் 2 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரும்பாலும் அன்ஜைனா, இதய செயலிழப்பு, ஹார்ட் அட்டாக், அரித்மியா, இதய வால்வு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை மக்களை பாதிக்கக்கூடிய இயல்பான நோய்களாக உள்ளன. இளைஞர்கள் மத்தியில் இதய நோய் ஏற்படுவதற்கான பெரும் அபாயங்கள் காரணமாக அவர்களால் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
இதய நோய் உருவாகுவதற்கான காரணங்கள்
இளம் வயதிலேயே உடல் பருமன் ஏற்படுவது, புகைப்பழக்கம், மோசமான உணவுப்பழக்கம், உடல் பயிற்சியின்மை, டைப் 2 வகை நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்ற இணை நோய்களும், இதயநோய் கொண்ட குடும்ப பின்னணியும் ஒருவருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கு காரணங்களாக அமைகின்றன.
அது மட்டுமல்லாமல், தற்போதைய உலகில் இளம் வயதிலேயே தவறான பழக்கம், வழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்வியல் நடவடிக்கைகள் போன்றவை காரணமாக இதய நோய்கள் வருகின்றன. இதுகுறித்து, பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் ஆலோசகர், மருத்துவர்.சுதீப் கூறுகையில், “இளம் வயதினரிடையே இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கற்பிக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.
ஆரோக்கியமான வாழ்வியல்
நடுத்தர வயது மற்றும் வயது முதிர்வு போன்ற காலங்களில் இதயநோய் குறித்த அபாயங்களை தவிர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான வாழ்வியல் நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். 20 முதல் 39 வயது வரையிலான இளைஞர்கள் 4 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதயநோய் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் அதிகரிக்கும் கண் நீர் அழுத்த நோய்… அறிகுறிகளும் தடுக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!
இதே வயது பிரிவினரில், ஏற்கனவே இதயநோய் கொண்ட குடும்பப் பின்னணியில் சேர்ந்தவராக இருப்பவர், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மொத்த கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு மற்றும் புகைப்பிடித்தல், பிஎம்ஐ குறியீடு, உடல் இயக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இதயநலன் தீர்மானிக்கப்படுகிறது என்று அமெரிக்க இதயநல சங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.