
இந்திய கடலோரக் காவல் படையில் 255 மாலுமிகள் (Posts of Navik (General Duty) and Navik (Domestic Branch) ஆள் சேர்க்கை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை உள்ள திருமணமாகாத ஆண்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
Navik (General Duty) : 225
Navik (Domestic Branch) : 30
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18-22 க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித் தகுதி: Navik ( General Duty ) பதவிக்கு இந்த பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
Navik ( Domestic Branch) பதவிக்கு 10ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், தேர்ந்தெடுக்கபபட்டவர்கள், இந்திய கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையமான ஐஎன்எஸ் சில்கா-வில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி? https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 16.02.2023 மாலை 5.30 மணி வரை ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.