
பெங்களூரு: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஷேர் சாட் தனது ஊழியர்களிடம் 500 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டது. ஷேர் சேட் நிறுவனம் 5 பில்லியன் டாலர் மதிப்புடையது. அதில் 2200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
அந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் 500 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘ஷேர் சாட், மோஜ் ஷார்ட் வீடியோ ஆப் நிறுவனங்களில் 500 பேரை நீக்கவுள்ளோம். எங்கள் நிறுவன வரலாற்றில் இது மிகவும் கடுமையான மற்றும் வேதனையளிக்கும் முடிவு. எங்கள் ஊழியர்கள் அனைவருமே மிகவும் திறமைசாலிகள். அவர்களில் 20 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்.