
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களின் வேட்பாளரை ஆதரிக்க கோரி பாஜவுக்கு அதிமுகவினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு பழனிசாமி ஆதரவாளர்கள் தங்கமணி, ஜெயக்குமார் வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து பழனிசாமி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக போட்டியிடுவது உறுதியான நிலையில் பாஜக போட்டியிடுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.