
டிவிட்டர் அலுவலகம்
இந்த நிலையில் தான் டிவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு வாடகை கொடுக்காமல் எலான் மாஸ்க் நிர்வாகம் உள்ளது என சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மற்றும் வாடகை பணம் எப்போது செலுத்தப்படும் என்பது இன்று தெரியாமல் இருக்கும் வேளையில் டிவிட்டர் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யும் விஷயம் வெளியாகியுள்ளது. உண்மை என்ன..?

எலான் மாஸ்க்
எலான் மஸ்க் அனுமதி உடன் டிவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருக்கும் பிரபலமான பறவை சின்னம், பல உயர்தர சமையலறை உபகரணங்கள், காபி டேபிள்கள், பிரிண்டிங் உபகரணங்கள், டிசைனர் சோஃபாக்கள், சவுண்ட் புரூஃப் கான்ஃபரன்ஸ் பூத் மற்றும் மற்ற கார்ப்பரேட் அலுவலகச் சொத்துக்கள் என 100க்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வாடகை பிரச்சனை
டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டிவிட்டர் அலுவலக இடங்களுக்கு வாடகைக்கு போதுமான பணம் செலுத்தாமல் தவித்து வருவதாக தகவல் வெளியான நேரத்தில் இந்த டிவிட்டர் அலுவலகப் பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்ற செய்தி பெரும் வேள்வியை எழுப்பியுள்ளது.

உண்மை என்ன..?
உண்மையில் யோசித்தால் சில பொருட்களை விற்பனை செய்தால் வாடகையோ அல்லது ஊழியர்களின் சம்பளமோ கொடுக்க முடியாது. ஆனால் தேவையில்லாத பொருட்களை விற்பனை செய்யும் போது ஊழியர்கள் அலுவலகத்தை ஏதுவாக அனைத்து விதத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் கூடுதல் வருமானம் எப்போதுமே நல்ல விஷயம் தான்.

படுக்கை அறை
சமீபத்தில் ஊழியர்களின் வசதிக்காக டிவிட்டர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு தளமும் படுக்கை அறையை அமைத்தார். இதேபோல் பல இடங்களில் டெக் அணிகள் ஆலோசனை செய்யப் பெரிய ஸ்கிரீன் கொண்ட மானிடர்களை அமைத்தார்.

வாடகை
இதேபோல் அலுவலகத்திற்கு வாடகை செலுத்த விஷயத்திற்கு வந்தால். தொழில்நுட்ப துறையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அலுவலக ரியல் எஸ்டேட் சந்தையில் உருவாகியுள்ள மாற்றங்கள் காரணமாக அலுவலகங்கள் அடுத்தடுத்து காலியாகி வருகின்றன.

மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட்
Facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை சியாட்டில் மற்றும் வாஷிங்டனில் உள்ள பெல்லூவ் பகுதியில் உள்ள அலுவலகங்களை அடுத்து காலி செய்து வருகிறது. இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் எலான் மஸ்க் என்றால் மிகையில்லை.

எலான் மஸ்க் சாதனை
எலான் மஸ்க் சமீபத்தில் ஒரு வருடத்தில் அதிக சொத்து மதிப்பை இழந்ததாகக் கின்னஸ் புத்தகத்தில் அவரின் பெயர் பதிவானது. கடந்த மாதம், டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் அவர் இழந்தார். இதோடு டெஸ்லா கார்களின் விலையும் குறைவதாக அறிவித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகியுள்ளது.