
சென்னை: அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் நிதியில் கல்லூரி தொடங்குவதை எதிர்த்து, கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவதாகவும் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். முந்தைய ஆட்சியில் கோயில் நிதியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்.8-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.