
நம் உடலில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியானது வளர்சிதை மாற்றம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பொறுப்பு வகிக்கிறது.
நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் தைராய்டு சுரப்பி, மிக குறைவாக அல்லது அதிகமாக உற்பத்தி செய்வது தைராய்டு கோளாறுக்கு காரணமாக உள்ளது. குறைபாடுள்ள தைராய்டு ஹார்மோன்கள் அல்லது ஒழுங்கற்ற தைராய்டு ஆண்களின் கருவுறுதலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
தைராய்டு ஹார்மோன்கள் அதிகம் சுரப்பது கோடோட்ரோபின் ஹார்மோன்களின் உற்பத்தியில் தலையிடலாம். இது டெஸ்டிஸ் செயல்பாடு மற்றும் விந்தணு தரத்தை பாதிக்கிறது. அதே போல விந்தணுக்களின் தரத்தில் ஏற்படும் குறைபாடுகள், தைராய்டு ஹார்மோன்கள் குறைவது தொடர்புடையதாக இருக்கலாம். விந்தணு உற்பத்தியை அடக்கும் ஹார்மோனான ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் ஹைப்பர் தைராய்டிசமானது கருவுறுதலை பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக சுரந்தாலும் சரி, குறைந்தாலும் சரி தைராய்டு கோளாறுக்கான அடிப்படை சிகிச்சை கருவுறுதலை மேம்படுத்தலாம். சில ஆய்வுகளின்படி ஆண்களின் கருவுறுதலில் தைராய்டு கோளாறு ஏற்படுகிறது.
ஆண்களின் கருவுறுதலில் தைராய்டு சுரப்பி கோளாறு ஏற்படுத்தும் சில விளைவுகள்:
குறைந்த டெஸ்டோஸ்டிரான் லெவல்ஸ்:
தைராய்டு கோளாறால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் லெவல்ஸ் குறைகிறது. ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் இரண்டுமே ஆண்களின் உடலில் இருக்கும் டெஸ்டோஸ்டிரான் அளவை பாதிக்கிறது. உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்தால் அது விந்தணு வளர்ச்சியை பாதிக்கும்.
செக்ஸ் ஹார்மோன்-பைண்டிங் குலோபுலின் (SHBG) பிளட் லெவல்ஸ்களில் ஏற்றத்தாழ்வுகள்:
SHBG என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒரு புரோட்டீன் ஆகும். இது டெஸ்டோஸ்டிரோன்-ஈஸ்ட்ரோஜன் பிணைப்பு குலோபுலின் (TeBG) என்றும் உள்ளது. டெஸ்டோஸ்டிரான், டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரான் (DHT) மற்றும் எஸ்ட்ராடியோலின் இயக்கத்திற்கு இது அவசியம். ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு இயல்பை விட குறைவான SHBG அளவுகள் இருக்கலாம், அதே சமயம் ஹைப்பர் தைராய்டிசம் உள்ள ஆண்களுக்கு SHBG அளவு அதிகமாக இருக்கலாம்.
இதையும் படியுங்கள்: உங்க கணவர் அல்லது காதலர் இதெல்லாம் செய்கிறாரா..? அப்போ அவர் தான் பெஸ்ட்.!
விந்தணு பாதிப்புகள்:
விந்தணுவின் அளவு, விந்தணு உருவவியல் மற்றும் விந்தணு இயக்கம் அதாவது விந்தணுவின் நகரும் திறன் உள்ளிட்டவற்றை ஹைப்போ தைராய்டிசம் பாதிக்கிறது. அதே போல ஹைப்பர் தைராய்டிசம் விந்தணுவின் அளவு மற்றும் தரம் இரண்டும் பாதிக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆண் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் விந்தணுவின் இயக்கம், அளவு மற்றும் தரம் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இவற்றில் தைராய்டு கோளாறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு ஆண்களின் கருவுறுதலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
லிபிடோ லெவல்:
ஆண்களுக்கு குறிப்பாக ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு லிபிடோ அளவு குறைவது, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் முன்கூட்டியே வெளியேறுவது உள்ளிட்ட சில பாலியல் செயலிழப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேற்கண்பவை ஒரு ஆணை மலட்டுத்தன்மையடைய செய்யவில்லை என்றாலும், இவை கருத்தரிப்பதை மிகவும் சவாலானதாக மாற்றும்.
லீன் மீட்ஸ், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் அதிகம் அடங்கிய டயட் விந்தணு இயக்கத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தைராய்டு தவிர ஆண் மலட்டுத்தன்மைக்கும் அதிக உடல் எடையுடன் இருப்பதற்கும் கனிசமான தொடர்பு உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். வழக்கமான உடல் செயல்பாடுகள் மூலம் எடையை சரியாக பராமரிப்பது தைராய்டு உள்ளிட்ட பல முக்கிய ஹார்மோன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்த முடியும். தினசரி அடிப்படையிலான உடல் செயல்பாடுகள் ஆண் கருவுறுதலில் சாதகமான விளைவைக் காட்டியுள்ளது. வழக்கமான ஒர்கவுட்ஸ் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த விந்து தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: