
ஆதார் கார்டு
இந்த நிலையில் மோடி அரசு ஆதார் அட்டை வைத்திருந்தால் 4.78 லட்சம் கடன் கொடுப்பதாக போலி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தரப்பில் Press Information Bureau (PIB)-வின் Fact Check பிரிவு உண்மையை மக்களுக்கு விளக்கியுள்ளது.

மோசடி திட்டம்
மத்திய தகவல் மற்றும் பிராட்காஸ்டிக் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் Press Information Bureau (PIB)-வின் Fact Check பிரிவு டிவிட்டர் பதிவில் இந்த மோசடி திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.4.78 லட்சம் கோடி கடன்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வழங்க உள்ளதாக போலி தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மை இல்லை போலி என PIB-யின் Fact Check பிரிவு டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

PIB-யின் உண்மை சோதனை பிரிவு
மேலும் மத்திய அரசு ஆதார் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை வழங்க உள்ளதாக வரும் செய்திகளை யாரும் பகிர வேண்டாம் என மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து PIB-யின் உண்மை சோதனை பிரிவு. இதேபோல் யாரிடமும் தங்களின் நிதியியல் மற்றும் வங்கி தகவல்களை அளிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

சமுக வலைத்தளம்
PIB-யின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவின் கண்காணிப்பு படி பதிவுகள், செய்திகள் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சமூகவலைத்தளத்தில் பரவி வந்தது. மேலும் இது போன்ற போலி செய்திகள் குறித்து PIB மக்களுக்கு டிவிட்டர் மற்றும் இதர சமுக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்தும், விழிப்புணர்வும் அளித்தும் வருகிறது.

டிஜிட்டல் கடன் சேவை
இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் கடன் சேவை பெயரில் பெரும் மோசடிகள் நடந்து வருகின்றன. கடன் மோசடி தாண்டி மக்களைப் பல வகையில் மிரட்டி அதிகப் பணத்தை வசூலித்து வருகிறது. மோசடி செய்யும் பெரும்பாலான டிஜிட்டல் கடன் செயலிகள் சீன நிறுவனங்களையும், சீன நாட்டவர்களையும் தொடர்புடையதாக உள்ளது.