
ஜாக்குலின் வாக்குமூலம்
இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அளித்த வாக்குமூலம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் சுகேஷ் தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் என்றும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
காதலியாக மாறினால்

இதேபோல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மற்றொரு பாலிவுட் நடிகையான நோரா பதேகியும் பாட்டியாளா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் சுகேஷ், தான் அவரது காதலியாக மாறினால், தனது தொழில் வாழ்க்கைக்கு நிதியளிப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவியான லீனா மரியா நடத்திய நடன நிகழ்ச்சியில் தான் நடுவராக இருந்ததற்காக தனக்கு ஐபோன் மற்றும் குஸ்ஸி பேக்கை சுகேஷ் சந்திரசேகர் பரிசாக அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் குறித்து நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா பதேகி அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை கிளப்பியுள்ளது.