
சுவாமி ரா ரா, குண்டன பொம்மா போன்ற தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சுதீர் வர்மா. அவரது நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன. இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சுதீர் வர்மா இன்று விசாகப்பட்டினத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. சுதீர் வர்மாவின் மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகின் சுதீர் வர்மாவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
சுதீர் வர்மாவின் மரணத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. இவரது இறுதிச்சடங்கானது நாளை விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் என்று கூறினார். அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: